News April 14, 2025

ஆன்மிக பயணத்தில் அண்ணாமலை!

image

ரஜினிகாந்த் பாணியில் ஆன்மிக பயணம் சென்றுள்ள அண்ணாமலையின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தலைவர் பதவி மாற்றத்திற்கு பிறகு நேற்று டெல்லி சென்ற அவர் அங்கிருந்து உத்தராகண்ட் புறப்பட்டுச் சென்றார். 3 நாள்கள் பயணமாக இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியில் வழிபாடு செய்ய உள்ளார். ‘பாபா’ முத்திரையுடன் இருக்கும் போட்டோவை அவரது ஆதரவாளர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

2 – 14% சரிந்த முக்கிய நிறுவனங்களின் பங்குகள்!

image

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவை கண்டுள்ளன. சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 84,285 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,944 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Wipro, Infosys, Nestle, Adani Enterpris உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2 – 14% வரை சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News November 25, 2025

வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்க CHECK THIS!

image

கூகுளில் வங்கியின் பெயரில் பல போலி வலைதளங்கள் இருப்பதால், பணத்தை இழக்கும் அபாயம் இருந்துவந்தது. இனி அந்த கவலையே வேண்டாம். இதற்கான புதிய விதிகளை RBI கொண்டுவந்துள்ளது. அதாவது, இனி நீங்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஒரிஜினல் வலைதளம் அனைத்தும் ‘bankname.bank.in’ என்ற URL-ல் தான் வரும். இப்படி வரும் வலைதளங்களை மட்டுமே நம்பி Access பண்ணுங்க. யாரும் பணத்தை இழக்காமல் இருக்க SHARE THIS.

News November 25, 2025

சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹174-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1000 குறைந்த நிலையில் இன்று ₹3,000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!