News April 12, 2025
அண்ணாமலை அமைச்சர், எல்.முருகன் கவர்னர்?

மத்திய அமைச்சரவையில் விரைவில் அண்ணாமலை இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. BJP மாநிலத் தலைவராக நயினார் தேர்வான பிறகு அண்ணாமலைக்கு PM மோடி, அமித்ஷா இருவரும் புகழாரம் சூட்டினர். அவரது சேவை தேசிய அளவில் தேவை என அமித்ஷா வெளிப்படையாகவே பதிவிட்டிருந்தார். இதனிடையே, விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் அண்ணாமலையையும், 2-வது முறையாக அமைச்சராக உள்ள எல்.முருகனை கவர்னராக்கவும் திட்டம் உள்ளதாம்.
Similar News
News December 9, 2025
மதுரையில் ஒரே நாளில் 300 பேர் கைது

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.
News December 9, 2025
செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News December 9, 2025
மூட்டு வலியை விரட்டும் அற்புத மூலிகை எண்ணெய்

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது. மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ➤கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளி கண்களில் விட குணமாகும். ➤ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.


