News April 7, 2025
மீண்டும் அண்ணாமலை ‘தலைவர்’?

தமிழகத்தில் பாஜக காலூன்ற அண்ணாமலை தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனராம். தேசிய தலைமைக்கும் மாநில தலைமை மாற்றத்தில் விருப்பமில்லை என்றாலும், இபிஎஸ் அழுத்தத்தால் மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை தலைவராக தொடர்வது குறித்து அதிமுகவிடம் மீண்டும் BJP பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News January 5, 2026
விழுப்புரம்: Phone-இல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே
News January 5, 2026
தவெகவில் இணைய திட்டமா? MLA ஐயப்பன் ரியாக்ஷன்

OPS ஆதரவாளரான MLA ஐயப்பன் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அவர், தவெகவில் இணைவதாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவித்துள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்றிருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்று கூறிய அவர், தான் தற்போது மதுரையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடைசி வரை OPS-வுடன் தான் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 5, 2026
மீண்டும் அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

தமிழகம் வந்துள்ள அமித்ஷா, பியூஷ் கோயல் ஆகியோருடன் 2-ம் நாளாக இன்றும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக தரப்பில் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில். மீண்டும் சந்தித்துள்ள எஸ்.பி.வேலுமணி, NDA கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை விரிவாக ஆலோசித்து வருகிறார்.


