News February 21, 2025
பரபரப்புக்காக பேசுகிறார் அண்ணாமலை: திருமா சாடல்

அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி வருவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருப்பதாகக் கூறிய அவர், நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து அவர் அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவரது அணுகுமுறை தனக்கு வியப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Similar News
News February 21, 2025
CT கிரிக்கெட்: ஆப்கனை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தெ.ஆப்பிரிக்க அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த தெ.ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய ஆப்கன் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 43.3 ஓவர்களில் 208 ரன்களில் சுருண்டது. இதனால் தெ.ஆப்பிரிக்க அணி 107ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
News February 21, 2025
ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசுகையில், இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அமளி நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இரவு முழுவதும் அங்கேயே தங்குகின்றனர்.
News February 21, 2025
3 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் இன்று, வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவித்துள்ளார். இதனால் மார்ச் 4இல் 3 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.