News April 16, 2024
அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பாஜகவுக்கு ரெடிமேட் துணியை போல ரெடிமேட் தலைவராக அண்ணாமலை வந்தார் என்றும், அவரிடம் ஆளுமை பண்பு கிடையாது என்றும் தெரிவித்தார். அண்ணாமலை காலி பெருங்காய டப்பா, அதில் வாசம் மட்டும்தான் வரும், எந்தவித பலனும் இருக்காது என்றும் உதயகுமார் கூறினார்.
Similar News
News April 29, 2025
இந்தியன் 2 போல் திராவிட மாடல் 2.0 தோல்வி

இன்றோடு முடிவுற்ற TN பேரவைக் கூட்டத்தொடரில், 2026-ல் திராவிட மாடல் Part 2 தொடரும் என CM ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து பேசிய ADMK உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், TN-ல் Part 2 எப்போதும் தோல்விதான், இந்தியன் 2 கூட தோல்வியடைந்து விட்டது எனக் கூறினார். DMK கூட்டணியில் அங்கம் வகிக்கும் MNM தலைவர் கமல்ஹாசன் நடித்த இப்படம் படுதோல்வியடைந்தது. INDIA கூட்டணியையே ஆர்.பி. கூறியதாக ADMK-வினர் சிலாகிக்கின்றனர்.
News April 29, 2025
டெல்லியில் அமித் ஷா ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டத்தில், உள்துறை செயலாளர், BSF, CRPF, NSG அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். எல்லையில் 5 நாள்களாக பாகிஸ்தானுடனான பதற்றம் தொடரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
News April 29, 2025
ஆன்லைன் ரம்மிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு விதிகளை வகுத்திருந்தது. இதை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. எழுத்துபூர்வமான வாதங்கள் முடிந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.