News June 26, 2024
செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை கடும் தாக்கு

நான்கு கட்சிகள் மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்., கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இறுதி வரை இந்திரா காந்தியை காமராஜர் ஏற்கவில்லை எனக்கூறிய அவர், காங்., கட்சி வசதிக்காக அரசியல் சாசனத்தை மாற்றி இருக்கலாம், வரலாற்றை மாற்ற முடியாது. 3 தேர்தலில் இரட்டை இலக்கத்தை தாண்டாத ஒரு கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. காலையில் ₹320 அதிகரித்த நிலையில், மாலையில் ₹1,120 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், 1 சவரன் ₹91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 24, 2025
PAK-க்கு ஆப்பு: இந்தியாவை பின்பற்றும் ஆப்கன்

பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவைப் போல ஆப்கனும் தனது நீர்வளத்தை ஆயுதமாக பயன்படுத்த உள்ளது. தங்களது நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் குனார் ஆற்றின் நடுவே அணைகளை கட்ட உள்ளதாக ஆப்கன் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியின் பாசனம், குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்தி கேள்விக்குறியாகும். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதிநீரை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
News October 24, 2025
பொருளாதாரத்தில் பெரிய நாடு.. இந்தியாவுக்கு எந்த இடம்?

டாப் 10 பணக்கார நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவுக்கு எந்த இடம்? முதலிடத்தில் இருப்பது எந்த நாடு? என்பதை போட்டோஸ் மூலம் கண்டுபிடித்து கமெண்ட்ல சொல்லுங்க!


