News June 4, 2024
கோவையில் அண்ணாமலை தோல்வி

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வீழ்த்தியுள்ளார். இதுவரை கோவையில் நேரடியாக களமிறங்காத திமுக, இந்த முறை தைரியமாக தனது வேட்பாளரை களமிறங்கியது. பாஜக, அதிமுக, கம்யூ., கட்சிகள் அங்கு வெற்றிக்கொடியை நாட்டிய நிலையில், சுமார் 28 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக திமுக வெற்றியை பதிவு செய்துள்ளது.
Similar News
News March 17, 2026
சேலம்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

சேலம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 17, 2026
ELECTION: தேர்தலில் தோல்வியடைந்த முதல்வர்கள்!

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற 16 பேரவைத் தேர்தல்களில் இதுவரை 2 முதல்வர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். 1967-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இவர் தான் தற்போது வரை தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வர் ஆவார். அதேபோல் 1996-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுகவின் EG சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.
News March 17, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

KYC அப்டேட்டால் <<19398205>>கேஸ் சிலிண்டர்<<>> புக் செய்பவர்களிடையே எழுந்துள்ள குழப்பத்திற்கு மத்திய அரசு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏற்கெனவே KYC அப்டேட் செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் மட்டுமே KYC பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை KYC அப்டேட் செய்யுமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.


