News August 14, 2024

கலைஞர் நாணய விழாவில் அண்ணாமலை…

image

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி CM ஸ்டாலின் தொலைபேசி மூலம் தனக்கு அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளார். கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும், அரசியல் நாகரீகத்திற்காக பங்கேற்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம், ஆளுநர் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது பிடிக்கவில்லை என்றார்.

Similar News

News November 26, 2025

ஜார்ஜ் கோட்டையே இலக்கு: தமிழிசை

image

நாளை, செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பது எங்கள் இலக்கு அல்ல என்ற அவர், ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே தவெகவில் இணையவுள்ள தகவலுக்கு KAS, OPS மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த பேச்சும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

News November 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

News November 26, 2025

‘Secret Deal’ குறித்து மனம் திறந்த DK சிவக்குமார்

image

கர்நாடக அரசியலில் முதல்வர் பதவிக்கான போட்டி பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முதல்வர் மாற்றம் குறித்து பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என DK சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை முதல்வராக்க வேண்டும் என கேட்கவில்லை என்றும், இது எங்களில் சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்த விரும்பவில்லை என்றார்.

error: Content is protected !!