News July 6, 2024
அண்ணாமலை அரைவேக்காடு: ஆர்.பி. உதயகுமார்

அண்ணாமலையை அரைவேக்காடு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். அதிமுகவை விமர்சித்தால் அண்ணாமலைக்கு எதிராக தொண்டர்கள் கொதித்தெழுவார்கள் என்றும், அப்படி எழுந்தால் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா கட்சியை காப்பாற்றும் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.
Similar News
News September 23, 2025
RECIPE: குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம்!

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும் *இளநீரை புளிக்க வைத்து மாவில் சேர்த்து, 6 மணி நேரம் புளிக்க வைக்கவும் *கருப்பட்டியை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும், வடிகட்டி மாவில் சேர்க்கவும் *இந்த மாவை ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் பஞ்சு போன்றும் சுட்டு எடுத்தால், சுட சுட குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம் ரெடி. SHARE.
News September 23, 2025
I Don’t care: சர்ச்சைக்கு பதிலளித்த பாக். வீரர்

ஆசிய கோப்பையில் இந்தியா உடனான Super 4 ஆட்டத்தில், பாக்., வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் விளாசியிருந்தார். அதனை கொண்டாடும் விதமாக பேட்டை வைத்து துப்பாக்கி சுடுவதுபோல செய்கை காட்டினார். இக்காட்சிகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அரைசதம் அடித்ததால் அப்படி கொண்டாடியதாகவும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பதில் தனக்கு கவலையில்லை எனவும் ஃபர்ஹான் கூறியுள்ளார்.
News September 23, 2025
BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் டிடிவியா?

NDA கூட்டணியில் இருந்து OPS, TTV அடுத்தடுத்து விலகியதால், அரசியலில் பரபரப்பு தொற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக தரப்பில் அண்ணாமலை, TTV-யை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளார். அப்போது, NDA கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், ஓபிஎஸ் விவகாரம், தற்போதை அரசியல் சூழ்நிலையை குறிப்பிட்டு, டிடிவி சில கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.