News December 28, 2024
அரசியல் தெரியாத கோமாளி அண்ணாமலை: எஸ்.வி. சேகர்

சவுக்கால் அண்ணாமலை தன்னைத் தானே அடித்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் அவரை விமர்சனம் செய்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். முன்னாள் பாஜக நிர்வாகியும், மூத்த நடிகருமான எஸ்.வி. சேகர், அரசியல் தெரியாத கோமாளி என்று அவரை விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலையை மாநில பாஜக தலைவராக தேர்வு செய்தோர் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News April 10, 2026
காலுக்குள் இருக்கிறேன் என கேவலமா பேசுறாங்க: EPS

கொரோனா காலத்தில் ஸ்டாலின் <<19603279>>காணாமல் போனார்<<>> என்றுதான் பேசினேனே ஒழிய, தவறாக பேசவில்லை என EPS விளக்கமளித்துள்ளார். ஆனால் தன்னை பார்த்து ஸ்டாலினும், உதயநிதியும் ’காலுக்குள் இருக்கிறேன்’ என தரக்குறைவாக விமர்சித்ததாக கூறிய அவர், தன்னால் இதை விட அதிகமாக திருப்பி பேச முடியும் என்றார். மேலும், எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது நானல்ல, எதிரிகள் தான் என்றார்.
News April 10, 2026
10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் புதிய உத்தரவு!

தமிழகத்தில் 10,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநரகம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை மதிப்பீட்டு ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி முழு மதிப்பெண் (‘சென்டம்’) பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை கவனமாக ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2026
காட்பாடியில் போராடுகிறாரா துரைமுருகன்?

2021-ல் காட்பாடியில் திமுகவின் துரைமுருகன், அதிமுகவின் ராமுவை விட 746 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றியை தக்க வைத்தார். இத்தொகுதியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள், 10.5% இட ஒதுக்கீடு உரிமை குறித்து துரைமுருகன் ஒருமுறை கூட ஆதரித்து பேசவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்களாம். இளம் வாக்காளர்களும் விஜய், சீமான் பக்கம் சாய்வதால், இம்முறை துரைமுருகன் கடுமையாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.


