News January 4, 2025
அண்ணா பல்கலை., விவகாரம்: VCK கவன ஈர்ப்பு நோட்டீஸ்

சட்டப்பேரவை ஜன.6 அன்று கூடவுள்ள நிலையில், அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை, வேங்கை வயல் சம்பவங்கள் குறித்து விவாதிக்க, VCK கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது. திருப்போரூர் விசிக MLA எஸ்.எஸ்.பாலாஜி சபாநாயகரிடம் இந்த நோட்டீஸை வழங்கினார். அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் இதே பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தும் நிலையில், திமுக கூட்டணி கட்சியான விசிகவும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
Similar News
News September 12, 2025
வாழ்வில் ஒருமுறையாவது இதை செய்து விடுங்கள் PHOTOS

வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் உலகில் ஏராளம். எழுந்திருப்பது, ஆபீஸுக்கு போவது, வீடு வருவது, தூங்குவது… இப்படி போரடிக்கும் தினசரி வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி, கொஞ்சம் திரில்லிங்கான சாகசங்களை செய்து பாருங்கள். இது உங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்ய வேண்டிய சில சாகசங்களை மேல் உள்ள போட்டோக்களில் ஸ்வைப் செய்து பாருங்கள்.
News September 12, 2025
சோஷியல் மீடியாவில் இருந்து விலகிய அனுஷ்கா

சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். நாம் உண்மையில் தொடங்கிய இடத்திற்கு பயணிக்க உள்ளதாகவும், விரைவில் நல்ல கதைகளுடனும், கூடுதல் அன்புடனும் சந்திக்கிறேன் என்றும் அவர் தனது X, இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான ‘காட்டி’ படம் படுதோல்வி அடைந்ததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News September 12, 2025
ACயால் மின் கட்டணம் உயர்கிறதா?

வீட்டில் குளுகுளுவென ஏசியில் இருக்க வேண்டும் என ஆசைப்படும் மக்கள் மின் கட்டணம் வரும் போது ஷாக் ஆவது வழக்கம்தான். ஆனால், சில டிரிக்ஸ் மூலம் மின் கட்டணம் அதிகரிப்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். மின் கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பதை போட்டோஸாக மேலே தொகுத்துள்ளோம், ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்!