News September 4, 2025

20-வது இடத்தில் அண்ணா பல்கலை.,

image

நாட்டின் சிறந்த பொறியியல் பல்கலை.,யான அண்ணா பல்கலை.,க்கு இது இறங்குமுகம். ஆம், தரவரிசையில் 2023-ல் 13-வது இடத்தில் இருந்த இது, 2025-ல் 20-வது இடத்துக்கும், Overall பிரிவில் 29-வது இடத்துக்கும் சரிந்துள்ளது. இந்த பல்கலை., வளாகத்தில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தால், பெயர் கெட்டுவிடக் கூடாது என மின்னல் வேக நடவடிக்கை எடுத்த அரசு, இதையும் அதே வேகத்தில் சரிசெய்யுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News March 28, 2026

தவெகவுடன் கூட்டணி.. முடிவை கூறினார்

image

அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் NDA-க்கும் தங்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், தவெக அணுகினால் அவர்களுடனான கூட்டணி குறித்து சிந்திப்போம் எனவும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும், தென் தமிழகத்தில் 50-60 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட பெறாது என்றும் தெரிவித்தார்.

News March 28, 2026

பொன்ராஜ் பேசியது தவறில்லை: சீமான்

image

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து ஆபாசமாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது<<19485483>>விஜய் <<>>நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் பேசியது தவறில்லை என்றும், அது ஆதங்கத்தின் வெளிப்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் பெண்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்க, விஜய் புகார் அளித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 28, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 28, பங்குனி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!