News April 13, 2024
தர வரிசையில் 40 இடங்கள் முன்னேறிய அண்ணா பல்கலை

2024 உலக பல்கலைக்கழக தர வரிசையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 40 இடங்கள் முன்னேறியிருப்பது மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடந்த ஆண்டில் 289ஆவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இருந்தது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் சிறந்த செயல்பாடு உள்ளிட்டவற்றை வைத்து 249ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் 9 இடங்கள் பின்தள்ளப்பட்டு 77ஆவது இடத்தை பிடித்துள்ளது.
Similar News
News September 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 8, ஆவணி 23 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News September 8, 2025
ரயில்வேயில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10th, 12th அல்லது ITI முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி விண்ணப்பிக்க வயது 15 முதல் 24 வரை ஆகும். இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News September 8, 2025
CM ஸ்டாலின் மீது இயக்குநர் கடும் விமர்சனம்

கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை செலுத்தியதை இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உழைக்கும் மக்களாகிய தூய்மை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க CM ஸ்டாலின் காவல்துறையை ஏவி அவர்களை அடித்து விரட்டியதாக சாடியுள்ளார். CM ஸ்டாலினை போலி சமூகநீதி முதல்வர் என்று லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.