News May 31, 2024

அண்ணா பொன்மொழிகள்

image

* பிறருக்குத் தேவைப்படும்போது நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவை முடிந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம்.
* புகழை நாம் தேடித் செல்லக்கூடாது, அதுதான் நம்மைத் தேடிவர வேண்டும்.
* ஊக்கத்தை கைவிடாதே அதுதான் வெற்றியின் முதல் படி.
* எதிரிகள் தாக்கித்தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித்தாங்கி வலுவைப் பெற்றிடுங்கள்.

Similar News

News November 27, 2025

இரவு 7 மணிக்குள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?

image

ஒரு மாதத்திற்கு நீங்கள் இரவுநேர உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவது, செரிமானம் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து சீக்கிரமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 27, 2025

ரஜினியை இயக்கும் வாய்ப்பை இழந்த தனுஷ்

image

ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தனுஷ் தவறவிட்டதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் கூறிய கதையில் நடிக்க ரஜினி விரும்பியுள்ளார். தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தியதால் அப்படத்தின் பணிகள் கைவிடப்பட்டன. சமீபத்தில் <<18291964>>சுந்தர்.சி<<>> விலகலால் ரஜினி தரப்பு மீண்டும் தனுஷை அணுகியுள்ளது. எனினும் உடனடியாக ஷூட்டிங்கை தொடங்க முடிவெடுத்ததால் தனுஷிற்கு பதிலாக ராம்குமாருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

News November 27, 2025

SIR படிவத்தில் உள்ள சிக்கலுக்கு ECI விளக்கம்

image

SIR படிவத்தில் உறவினர்கள் பெயர் கட்டாயமில்லை என TN தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய இயலாவிட்டால், பிற விவரங்களை நிரப்பினால் போதும் என்றும் கூறியுள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழியை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!