News September 24, 2025
அனிருத், மணிகண்டனுக்கு கலைமாமணி விருது

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத், சாண்டி மாஸ்டர், இயக்குநர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேகா, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் மணிகண்டன் ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு CBI-க்கு மாற்றம்

BSP கட்சியின் மறைந்த முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றி சென்னை HC உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை CBCID விசாரித்து வந்த நிலையில், கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் CBCID உடனடியாக ஆவணங்களை CBI-யிடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தரகர்கள் எல்லாம் தலைவர்களாகி விட்டதால் நாட்டில் இஷ்டத்திற்கு வரி விதிக்கப்படுவதாக சீமான் சாடியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களின் சுமை குறையும் என்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த வரியை விதித்தது யார்? ஜிஎஸ்டி வரி மக்களுக்கு சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
News September 24, 2025
டிரம்ப்பின் அறிவிப்பை ஆதரிக்கும் USA நிறுவனங்கள்

H-1B விசா கட்டண உயர்வு குடியேற்றத்தை நெறிப்படுத்துவதற்கான முயற்சி என Nvidia, OpenAI நிறுவனங்கள் ஆதரித்துள்ளன. அதேசமயம், தேசத்தின் வளர்ச்சிக்கு திறன்மிக்க ஊழியர்களின் குடியேற்றம் அவசியம் எனவும், இத்தகைய குடியேற்றத்தால் தான் USA-ன் அடித்தளம் போடப்பட்டுள்ளதாகவும் Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். அதேபோல், திறமை மிகு ஊழியர்களை தக்கவைப்பது அவசியம் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.