News April 25, 2025

கவின் படத்தில் அனிருத்.. அசத்தும் காம்போ

image

முன்னணி நடன இயக்குநரான சதீஷ், நடிகர் கவினை வைத்து ‘கிஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார். ‘கிஸ்’ படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். அனிருத் குரல் கவினுக்கு கைகொடுக்குமா?

Similar News

News December 10, 2025

₹12 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே மது வாங்க முடியும்!

image

மதுவிலக்கு அமலில் உள்ள சவுதியில், முதல்முறையாக இஸ்லாமியர் அல்லாத வெளிநாட்டு குடிமக்களுக்கு மது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், மாதம் ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே, தங்கள் வருமான சான்றிதழை காட்டி மது வாங்க முடியும். முன்னதாக, 1952-ல் அந்நாட்டு அரசரின் மகன் குடிபோதையில், பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக் கொன்றதால், 73 ஆண்டுகளாக மது தடை செய்யப்பட்டிருந்தது.

News December 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 10, கார்த்திகை 24 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News December 10, 2025

ஜான் சீனா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் & பேட் நியூஸ்!

image

WWE-ல் அதிக ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, அதில் இருந்து ஓய்வு பெற இன்னும் 4 நாள்களே உள்ளன. வரும் 13-ம் தேதி பாஸ்டனில் நடைபெறும் போட்டியே அவரது கடைசி போட்டியாகும். இதனால், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளார். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு WWE தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், அவரை Ring-ல் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே உள்ளது.

error: Content is protected !!