News August 30, 2025
₹300 கோடி வசூல் செய்த அனிமேஷன் படம்

கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான ‘மகாவதார் நரசிம்மா’ இதுவரை ₹300 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படங்களில் இப்படம் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் 7 படங்களில் இது முதல் படமாகும்.
Similar News
News August 31, 2025
ஜெலன்ஸ்கியின் நம்பிக்கை நாயகனாக மாறிய மோடி

புடினை மோடி சந்தித்து பேச உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் அவருடன்(Modi) தொலைபேசியில் பேசியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஜெலன்ஸ்கி மோடியிடம் எடுத்துரைத்திருப்பார் என தெரிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள மோடி புடின் உள்பட பல நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். போரை நிறுத்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என மோடி ஏற்கெனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 444
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
News August 31, 2025
CM வேட்பாளர்! ராகுலுக்கு ஷாக் கொடுத்த தேஜஸ்வி

பிஹாரில் தேர்தல் அலை வீசி வரும் நிலையில் அங்கு இந்தியா கூட்டணியின் CM வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவித்துக் கொண்டார். நிதிஷ் குமார் தன்னை காப்பி அடித்து திட்டங்களை நிறைவேற்றுதாக பேரணியில் பேசிய அவர், உங்களுக்கு Orginal CM வேண்டுமா? Duplicate CM வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.