News June 13, 2024

அர்ஷ்தீப் சிங்கை பாராட்டிய அனில் கும்ப்ளே

image

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசிய விதம் சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளில், சிறப்பான ஃபார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனக் கூறிய கும்ப்ளே, அவருக்கு அணியில் இடம் கிடைக்க வழிவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 2, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

image

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

News March 2, 2026

349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு ஜூலை 19-ம் தேதி நடைபெறும். SHARE.

News March 2, 2026

வங்கிக் கணக்கில் ரூ.2,000.. அரசு புதிய அறிவிப்பு

image

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும், விவசாய <<19194432>>அடையாள எண்<<>> பெற்றிருப்பது அவசியம். இதற்கு, தேவையான நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் அலுவலகங்களில் கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். இதன்பிறகே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகை ₹2,000 செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!