News August 9, 2025
கோபம் தான் சிராஜின் ஆயுதம்: ரஹானே

சிராஜின் கோபமும், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையும் அவரை இன்னும் சிறப்பாக பவுலிங் செய்ய வைக்கும் என ரஹானே தெரிவித்துள்ளார். தன்னுடைய கேப்டன்சியில் 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் டெஸ்ட்டில் சிராஜ் அறிமுகமானதாகவும், அவரை லேட்டாக பவுலிங் வீச வைத்ததற்கு கோபபட்டதாகவும் ரஹானே நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அதே கோபம் இங்கிலாந்து தொடரிலும் எதிரொலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
2025 வருமான வரி மசோதா வாபஸ்

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை, நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். அதேநேரம், வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில் ஆக.11-ல் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. TDS, TCS விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.
News August 9, 2025
TN அரசு செய்துள்ளது NEP-யின் Copy கொள்கை: நயினார்

TN அரசு வெளியிட்டுள்ளது மாநில கல்விக் கொள்கை அல்ல தேசிய கல்விக் கொள்கையின் காப்பி(Copy) கொள்கை என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில்(NEP) மும்மொழி கொள்கை மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். இதே கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களான தமிழிசை, <<17341526>>அண்ணாமலை<<>> உள்ளிட்டோரும் கூறியுள்ளனர்.
News August 9, 2025
ஒரு ரூபாய் செலவில்லை… இலவச மருத்துவ ஆலோசனை

மத்திய அரசின் தொலைதூர மருத்துவ சேவை தான் இ-சஞ்சீவனி (esanjeevani.in) திட்டம். இதன்மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தொலைபேசி / வீடியோ கால் அழைப்பு மூலம் உங்கள் நோய்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனையுடன் டாக்டர் இ-பிரிஸ்கிரிப்ஷனும் கொடுப்பார். இதை பார்மஸியில் காட்டி மருந்துகளும் வாங்கலாம். ஆயுர்வேத டாக்டர்களிடமும் ஆலோசனை பெறலாம்.