News April 24, 2025
காஷ்மீர் மக்களை நினைத்து ஆண்ட்ரியா வேதனை

பஹல்காம் தாக்குதல் இதயத்தை உலுக்குவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இதன் பிறகு அதீத கண்காணிப்பிற்கு உள்ளாகப்போகும் காஷ்மீர் மக்களை நினைத்து இதயம் கணப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இச்சூழலில், இச்சம்பவத்தால் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
International Roundup: ஃபிரான்ஸ் EX அதிபருக்கு சிறை

*ஆப்பிரிக்க நாடான கினி பிசாவ்வோவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி. *ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்கோசியின் சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. *உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் ஆலோசகர்களின் தொலைபேசி அழைப்புகள் லீக்கானது. *பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
News November 26, 2025
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.
News November 26, 2025
என்னை மட்டுமே பழி சொல்றாங்க: கம்பீர் வேதனை

நான் பயிற்சியாளராக நீடிக்க தகுதி உள்ளவனா, இல்லையா என்பதை BCCI தான் முடிவு செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கு இந்தியாவின் கிரிக்கெட் தான் முக்கியம், தனிமனிதன் முக்கியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு அனைத்து வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக பழி என்னில் இருந்தே தொடங்குகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.


