News October 7, 2025

மிதாலி ராஜை கெளரவிக்கும் ஆந்திர அரசு

image

மகளிர் கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனை படைத்த மிதாலி ராஜை ஆந்திர அரசு கெளரவிக்க முடிவெடுத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு ஸ்டாண்டுக்கு மிதாலி ராஜ், உள்ளூர் வீராங்கனை ரவி கல்பனா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன. விசாகப்பட்டினத்தில் IND W Vs AUS W உலக கோப்பை போட்டி நடைபெறும் அக்.12-ம் தேதி அன்று, அவர்களது பெயர்களில் இரு ஸ்டாண்ட்களும் திறக்கப்படவுள்ளன.

Similar News

News October 7, 2025

டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த புடின்

image

டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் அமெரிக்கா-ரஷ்யா உறவு பாதிக்கப்படும் என டிரம்ப்பை, புடின் எச்சரித்துள்ளார். களத்தில் அமெரிக்க படையின் உதவி இல்லாமல் உக்ரைனால் அந்த ஏவுகணைகளை இயக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், அவற்றை அமெரிக்கா வழங்கியிருந்தாலும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு திறம்பட எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார். டோமாஹாக் ஏவுகணை 2,500கிமீ தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும்.

News October 7, 2025

6 மாவட்டங்களில் கனமழை பொழியும்

image

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களிலும், நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும் கனமழை பொழியும் என்று IMD தெரிவித்துள்ளது. எனவே, வெளியே சென்றால் குடை எடுத்துச் செல்லுங்க..

News October 7, 2025

பிஹாரில் NDA கூட்டணிக்கே வெற்றி: கருத்துக்கணிப்பு

image

பிஹாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என Matrize கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. NDA கூட்டணி (BJP, JDU) மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 150 – 160 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி (RJD, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்) 70 – 85 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 – 5 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!