News June 2, 2024
ஆந்திரா – ஹைதராபாத் உறவு இன்றோடு முறிந்தது

2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்றும் அதற்குள் ஆந்திரா புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஆந்திரா புதிய தலைநகரை முடிவு செய்யவில்லை. இருப்பினும், 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் ஆந்திரா – ஹைதராபாத் இடையேயான உறவு இன்றோடு முறிந்தது.
Similar News
News September 10, 2025
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.
News September 10, 2025
BREAKING: கூட்டணியில் இணைகிறேன்.. TTV ட்விஸ்ட்

TTV, OPS மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று நயினார், அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், NDA கூட்டணி முதல்வர் வேட்பாளரான EPS-ஐ மாற்றினால், கூட்டணியில் இணைவதாக TTV அறிவித்துள்ளார். இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத BJP தலைமை, செங்கோட்டையனை போல், தினகரனையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கான அசைன்மென்ட் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
News September 10, 2025
செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.