News March 16, 2024

ஆந்திர சட்டசபைக்கு மே 13ல் தேர்தல்

image

ஆந்திரா சட்டசபைக்கு மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது. 175 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 25ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் 26ஆம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ல் எண்ணப்படும்.

Similar News

News November 3, 2025

கூட்ட நெரிசல்தான் காரணம்: மன்னிப்பு கேட்ட ஷாருக்

image

கூட்ட நெரிசல் மரணங்கள் நாட்டை உலுக்கிய நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த வருட பிறந்தநாளில் தனது ரசிகர்களை சந்திக்கவில்லை. இது குறித்து X தளத்தில், ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால், காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இந்த முடிவை எடுக்க, கூட்டநெரிசல் பிரச்னையே காரணம். உங்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவை எடுத்தேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

News November 3, 2025

நீதிமன்றத்தை நாடுகிறார் செங்கோட்டையன்

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செங்கோட்டையன் இன்று நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளார். நோட்டீஸ் கூட வழங்காமல் கட்சி விதிகளை மீறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார். ஆனால், கட்சி விதிகளின் அடிப்படையில்தான் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று இரவு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த செங்கோட்டையன், இன்று வழக்கு தொடரவிருக்கிறார்.

News November 3, 2025

அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

image

தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. மூத்த குடிமக்களுக்கான வயது 70-ல் இருந்து 65-ஆக தளர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நவ.3 – 6-ம் தேதி வரை வழங்குவதாக TN அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!