News December 7, 2024
ஆதவ் அர்ஜூனாவை நான் இயக்கவில்லை

”திமுகவிடம் நான் கேட்க வேண்டியதை நான் நேரடியாகவே கேட்பேன். ஆதவ் அர்ஜூனாவை இயக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். திமுகவை ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவரை திருமாவளவன் பின்னாலிருந்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. முன்னதாக, ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது சொந்தக் கருத்து என்று திருமா கூறியிருந்தார்.
Similar News
News March 24, 2026
சற்றுமுன்: கூட்டணியை நிராகரித்தார் திருமா

கூட்டணிக்கு வருமாறு திருமாவளவனிடம் <<19461589>>தவெக <<>>தரப்பில் மீண்டும் பேசியதாக சற்றுமுன் தகவல் வெளியானது. ஆனால், திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் நம்பகத்தன்மை போய்விடும் என்றும், திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் திருமா எண்ணுவதாக தெரிகிறது. இதனால், தவெகவின் கூட்டணி அழைப்பை ஆரம்ப கட்டத்திலேயே திருமா நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
News March 24, 2026
மோடி, அமித்ஷாவுக்கு END நெருங்குகிறது: கெஜ்ரிவால்

மோடி, அமித்ஷாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஒரு காலத்தில், மோடிக்கு எதிராக மீம் பதிவிட்டவர்கள் கூட கைதானதாக கூறிய அவர், ஆனால் இன்றோ, மோடி மீதான விமர்சனங்களால் SM பக்கங்கள் நிரம்பி வழிகின்றன என்றார். மேலும், மோடி & பாஜகவின் செல்வாக்க சரிந்து வருகிறது என்றும் ஆனாலும் அவர் இன்னும் தேர்தல்களில் வெல்கிறார் என்றால் அதற்கு EC தான் காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 24, 2026
சற்றுநேரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் <


