News December 29, 2024
அன்புமணிக்கு கிடைத்த வெற்றி?

பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பை முகுந்தன் ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்தவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா? வேறு யாரையாவது போடுங்க என பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம், தந்தை – மகன் மோதலாக வெடித்தது. இதனால் அன்புமணியை மீறி தனக்கு அந்த பொறுப்பு வேண்டாம் என்ற முடிவுக்கு முகுந்தன் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 8, 2026
பிரிட்டனின் உதவி தேவையில்லை: டிரம்ப்

ஈரானுடனான போரில் பிரிட்டனின் ஆதரவு இல்லாததை எப்போது நினைவு கொள்வேன் என டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர், ஒரு காலத்தில் சிறந்த நட்பு நாடான இங்கிலாந்து, இறுதியாக தற்போது 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது; ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஈரான் போரில், தற்போது கூட்டு சேரும் நபர்கள் தங்களுக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 8, மாசி 24 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 8, 2026
இரண்டு நாளில் கூட்டணி உறுதியாகும்: வீரபாண்டியன்

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – சிபிஐ இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மார்ச் 8,9-ம் தேதிக்குள் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் என்றார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை என்றும், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும் எனவும் தெரிவித்தார்.


