News August 17, 2025
அன்புமணியின் பொதுக்குழு தான் செல்லும்: K.பாலு

PMK-வில், கடந்த 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த கூட்டம் தான் செல்லும் என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் K.பாலு தெரிவித்துள்ளார். மேலும், விழுப்புரத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 37 தீர்மானங்கள் செல்லாது எனவும், அந்தத் தீர்மானங்கள் தங்களை கட்டுப்படுத்தாது எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியில், தந்தை – மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Similar News
News March 23, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது.. இதுவே முதல்முறை

<<19457456>>ட்ரம்ப் போர் நிறுத்தம்<<>> அறிவித்ததன் எதிரொலியாக, வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 3 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காலை, மாலை சேர்த்து மொத்தமாக 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹7,600 குறைந்திருந்தது. ஆனால், தற்போது சவரனுக்கு ₹5,360 உயர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹13,340-க்கும், 1 சவரன் ₹1,06,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. SHARE IT
News March 23, 2026
234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

தமிழகத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜய்க்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கின்றனரா என்பது சந்தேகமான ஒன்றுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக சார்பில் EPS தான் முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் பற்றிய குஷ்புவின் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 23, 2026
CINEMA 360: கருப்பு படத்தில் சிம்பு!

*‘கருப்பு’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் *கென் கருணாஸ் இயக்கும் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் *குட்டி டிராகன் கேரக்டரை போல, STR 51 படத்தில் சந்தானத்தின் கேரக்டர் இருக்கும் என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ₹15 கோடி செலவு செய்துள்ளார்களாம். இதில் மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, ஆயிஷா கான் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.


