News September 11, 2025
உதயநிதி ஸ்டைலில் அன்புமணி எடுத்த செங்கல்!

2021 தேர்தல் பிரசாரத்தின்போது, எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை விமர்சிக்கும் வகையில், AIIMS என எழுதப்பட்ட செங்கலை காட்டி உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கடலூரில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக திமுக அரசால் நாட்டப்பட்ட அடிக்கல்லை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததாக, அன்புமணி கூறினார். கல்லூரி கட்டுமானத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News September 11, 2025
அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்: ராமதாஸ்

அன்புமணியை நீக்குவது பாமகவுக்கு பின்னடைவு அல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயிரின் நடுவே முளைத்த களையான அன்புமணியை நீக்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும், அன்புமணி தன்னிடம் 40 முறை பேசியதாக கூறுவது உள்பட அவர் பேசுவது அனைத்தும் வடிகட்டிய பொய் என்றார். ஒட்டுக்கேட்பு கருவி வைத்து தன்னையே உளவு பார்த்தவர் அவர் என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
News September 11, 2025
CM ஸ்டாலின் குடும்பத்தில் பேரிழப்பு.. உருக்கமான இரங்கல்

சபரீசனின் தந்தை <<17674558>>வேதமூர்த்தி<<>> உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, எனது மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தியின் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், குடும்பத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு பவர் இல்லை

அன்புமணியை பாமகவிலிருந்து ராமதாஸ் நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இம்முடிவு குறித்து கருத்து கூறிய அன்புமணி ஆதரவாளர் வடிவேல் ராவணன், பாமகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்கும் உரிமை ராமதாசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். தந்தை-மகனுக்கு இடையே இருக்கும் உரசல் அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை, சிறிய பிரச்னைதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.