News September 22, 2025
அப்பாவுக்கே துரோகம் செய்த அன்புமணி: எம்.ஆர்.கே.

பதவிக்காக முகவரியை மாற்றி கட்சியை கைப்பற்றிய அன்புமணிக்கு திமுகவை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாடினார். கொரோனா லாக்டவுனில் திமுகவினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதன்பிறகு ஸ்டாலின் CM ஆக வேண்டும் என மக்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், அப்பாவுக்கு துரோகம் செய்த அன்புமணி, மக்களுக்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 22, 2025
₹6000 உதவித்தொகை வழங்கும் அரசு திட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க <
News September 22, 2025
சம வேலைக்கு சம ஊதியம்.. என்ன விவகாரம்!

2009 திமுக ஆட்சியில், மே 31-ல் நியமிக்கப்பட்ட அரசு பள்ளி <<17790293>>இடைநிலை <<>>ஆசிரியர்களை விட, ஜூன் 1-ல் தேதிக்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ₹3,170 வித்தியாசம் இருந்தது. இந்த முரண்பாடுகள் களையப்படும் என தற்போதைய CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கு 2023 ஜனவரியில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால், தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
News September 22, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், போட்டோ உள்ளிட்ட விவரங்களை EMIS தளத்தில் பதிவிட வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் விவரங்களை அக்.6 முதல் 23-ம் தேதிக்குள் HM-கள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அனுப்புவதற்கு ஏற்ப பெற்றோர்களின் செல்போன் எண்ணை பதிவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SHARE IT.