News March 14, 2025
மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம்

மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அன்புச்சோலை திட்டம் மூலம் 25 இடங்களில் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
முறியடிப்பதற்கே சாதனைகள்: லாரா

டெஸ்டில் 4 சதங்கள் சாதனையை முறியடிக்க <<16984490>>வாய்ப்பு கிடைத்தால்<<>>, அதை செய்ய வேண்டுமென வெ.இண்டீஸ் லெஜண்ட் பிரயன் லாரா தனக்கு ஆலோசனை கூறியதாக SA கேப்டன் வியான் முல்டர் தெரிவித்துள்ளார். ‘உங்களுடைய லெகசியை நீங்கள் உருவாக்க வேண்டும். சாதனைகள் முறியடிப்பதற்கே’ என்று லாரா அப்போது கூறியுள்ளார். லாராவின் சாதனையை(400*) முறியடிக்க முனையாமல், 367* ரன்னில் முல்டர் டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.
News July 11, 2025
உங்களை தவிர யாருமில்லை.. அன்புமணி உருக்கம்

டாக்டர் ராமதாஸுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், பாமகவினருக்கு அன்புமணி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், பாமகவினருக்காக தான் இருப்பதாகவும், கட்சித் தொண்டர்களைத் தவிர தனக்கு வேறு எவருமில்லை என தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்றும், இது உறுதி என்றும் கட்சியினரை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 11, 2025
3 தீவிரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி விளக்கம்

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை TN போலீசார் கைது செய்துள்ளனர். 58 பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி, சாதிக்கை TN ATS போலீசார் 30 ஆண்டாக தேடி வந்தனர். அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து போலீசார் கைது செய்திருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.