News February 2, 2025

முதல்வரின் பாராட்டு மழையில் நனைந்த அன்பில் மகேஸ்

image

அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயலாற்றி வருவதாக ‘சாரண சாரணியர்’ வைர விழாவில் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தை சிறப்பாக நடத்தி வரும் அன்பில் மகேஸ், மாணவர்களை கல்வியால், அறிவால் முன்னேற்றச் செய்து, அவர்கள் வளர்வதை பார்த்து மகிழ்கிறார் என பெருமிதம் தெரிவித்த அவர், நாட்டுப்பற்று என்பது நிலத்தைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும் என்றார்.

Similar News

News March 2, 2026

PM அலுவலகம் மீது தாக்குதல்: நெதன்யாகுவின் நிலை என்ன?

image

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் IRGC படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த நேரத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா, அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

News March 2, 2026

கார் விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒருவர் பலி UPDATE

image

<<19278785>>கார் விபத்தில் <<>>தனது டிரைவர் முத்து உயிரிழந்தது தொடர்பாக நடிகை தேவிப் பிரியா உருக்கமாக பேசியுள்ளார். முத்து தனக்கு அம்மா மற்றும் தம்பி போன்று இருந்ததாகவும் 15 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்ததாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். ஷூட்டிங்கிற்காக தேனிக்கு சென்று கொண்டிருந்தபோது கார் டயர் பஞ்சரானதாக கூறிய அவர், அப்போது நிறுத்தி வைத்த தனது கார் மீது மற்றொரு கார் மோதியதாக தேவிப் பிரியா தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா ₹16 லட்சம் அபராதம்

image

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறாததால் பாக்., மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதால், ஒவ்வொரு வீரருக்கும் தலா ₹16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் முடித்தாலும் நெட் ரன்ரேட் காரணமாக பாக்., அரையிறுதிக்கு செல்லவில்லை.

error: Content is protected !!