News October 15, 2025
உடற்கூராய்வு: இபிஎஸ் கேள்வி, அமைச்சர் பதில்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் உடல்களுக்கு ஒரே இரவில் எப்படி உடற்கூராய்வு செய்தீர்கள் என்று சட்டப்பேரவையில் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வளவு அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன் என்றும் அவர் வினவினார். அதற்கு, 25 மருத்துவர்களை கொண்டு ஆட்சியர் அனுமதியுடன் தான் உடற்கூராய்வு செய்ததாக அமைச்சர் மா.சு., பதிலளித்துள்ளார். இதற்கான முழு வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
கரூரில் பாதுகாப்பு குறைபாடா? CM பேரவையில் விளக்கம்

கரூர் துயரத்துக்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என சட்டப்பேரவையில் EPS குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய, ஸ்டாலின் விஜய்யே காவல்துறைக்கு சல்யூட் என கூறிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கியதாக கூறியுள்ளார். விஜய்யே காவல்துறையை பாராட்டி இருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று EPS சொல்லவது எப்படி சரியாக இருக்கும் என CM கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 15, 2025
தொடர்ந்து சரியும் IPL-ன் மவுசு!

பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடரான IPL-ன் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது. 2023-ல் ₹93,500 கோடியாக இருந்த IPL-ன் மதிப்பு, 2024 சீசனில் ₹82,700-ஆகவும், 2025-ல் மேலும் ₹6,600 கோடி குறைந்து, தற்போது ₹76,100 கோடியாகவும் உள்ளது. ஆன்லைன் மணி கேம்கள் தடை செய்யப்பட்டது, ஒரே நிறுவனத்துக்கு மீடியா உரிமை அளிக்கப்பட்டது இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். உங்களுக்கும் IPL ஆர்வம் குறைந்துவிட்டதா?
News October 15, 2025
தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கம் அல்ல: CM ஸ்டாலின்

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கூறியுள்ளார். இதேபோல் இனி நடக்காமல் தடுக்க SC தீர்ப்பின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.