News October 7, 2025
அஜித்துக்கு ஆனந்த் மஹிந்திரா புகழாரம்

சினிமாவுக்கு தற்காலிக லீவ் விட்டுள்ள அஜித்குமார், ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், ஸ்பெயினில் மஹிந்திராவின் ‘FORMULA E GEN 2’ காரை அஜித் டெஸ்ட் டிரைவ் செய்தார். இதுதொடர்பான போட்டோஸை X தளத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, ‘Spain, Speed, and Style’ என குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் அடுத்த சாகசத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 7, 2025
ஜட்ஜுக்கு ஆதரவு.. வக்கீல் மீது தாக்குதல்: அண்ணாமலை சாடல்

சென்னையில் <<17939878>>வக்கீல் மீது விசிகவினர் தாக்குதல்<<>> நடத்தியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் விசிக குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், CJI மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வரும் வழியில், விசிகவினர் வக்கீலை தாக்கி இருப்பது முரண்பாடாக இருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
News October 7, 2025
Pilot-கள் Scent அடிக்கமாட்டாங்க; ஏன் தெரியுமா?

ஒவ்வொரு பயணத்துக்கு முன்னதாகவும் விமானிகள் மது அருந்தி இருக்கிறார்களா என சோதனை செய்யப்படுகிறது. Scent/perfume-களில் ஆல்கஹாலும் கலந்திருப்பதால், சோதனையின் போது அவர்கள் போதையில் இருப்பதாக காட்டும். அதனால், பைலட்கள் Scent அடிப்பதை தவிர்க்கிறார்கள். மேலும், ஆல்கஹால் இருக்கும் sanitizers, mouthwasher-களை கூட விமானிகள் பயன்படுத்துவதில்லை. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News October 7, 2025
₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது: இதை செய்யாதீங்க

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டியது செல்போன் எண். ஆதார், வங்கி பாஸ்புக்குடன் ஒரே எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். அப்போதுதான், பயனாளர்களை அரசால் எளிதில் அடையாளம் காண முடியும். வெவ்வேறு எண் இருந்தால், அரசின் குறுஞ்செய்தி சென்றடைவதிலும் சிக்கல் எழும். நவம்பர் வரை உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.