News August 17, 2024
அனல் தெறிக்கும் விஜய்யின் அரசியல் வசனம்

“G.O.A.T” ட்ரெய்லரில் “DO YOU THINK YOU CAN STOP ME?, NO ONE CAN STOP ME” என்ற விஜய்யின் வசனம், அரசியல் பஞ்சாக வைரலாகி வருகிறது. அதேபோல், “அண்ணே வரார் வழிவிடு” போன்ற பல டயலாக், அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ரா உளவாளியாக அப்பா விஜய்யும், அவருக்கு உதவி செய்யும் மகன் (AI) விஜய்யும் தோன்றும் காட்சியில் விசில் பறக்கப்போகிறது. G.O.A.T ட்ரெய்லர் பிடித்திருக்கிறதா? என்பதை கமெண்ட் செய்யுங்க.
Similar News
News December 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
News December 6, 2025
இந்த வார ஓடிடி ட்ரீட்!

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *கோமதி சங்கரின் ‘STEPHEN’ : டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ரே’: டிச.5, ஜியோ ஹாட்ஸ்டார் * ரஷ்மிகாவின் ‘The Girlfriend’: டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *அஸ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’: டிச.5, ஆஹா *விதார்த்தின் ‘குற்றம் புரிந்தவன்’: டிச.5, சோனி லைவ் *வைபவின் ‘The Hunter’ Chapter 1: டிச.5, ஆஹா
News December 6, 2025
12 மாவட்டங்களில் மழை பொழியும்: IMD

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் வாகனம் ஓட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?


