News April 30, 2025
மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
Similar News
News January 4, 2026
இப்படியும் ஒரு சாவா? ஜாக்கிரதை!

சாவு எப்படி வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது! உ.பி.,யின் பகோரா கிராமத்தில், பசவான் என்பவர் கடும் குளிருக்கு நெருப்பு மூட்டி குளிர் காய்ந்திருக்கிறார். அப்போது திடீரென வலிப்பு ஏற்படவே, குளிர்காய்ந்த நெருப்பிலேயே விழுந்து பலியாகியுள்ளார். இதில் கொடுமை, அவர் உடல் கருகும் வாசனையை உணர்ந்த பின்னரே, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். மக்களே இந்த குளிர்காலத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!
News January 4, 2026
BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது என HM-களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளில் மின்கசிவு உள்ளதா, பள்ளி கட்டடங்கள் மழையால் பலவீனமாகி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 4, 2026
அல்லு அர்ஜுனை ஓவர்டேக் செய்வாரா ரன்வீர் சிங்?

இந்தியாவில் ₹800 கோடி வசூலைக் கடந்த முதல் நேரடி பாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை ’துரந்தர்’ பெற்றுள்ளது. ரன்வீர் சிங் நடித்துள்ள இப்படம் ஏற்கெனவே உலகளவில் ₹1,000 கோடி வசூலை எட்டிவிட்டது. எனினும் தற்போது வரை ₹830 கோடியுடன் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற சாதனை அல்லு அர்ஜுனின் இந்தி பதிப்பான ’புஷ்பா 2’ வசம் உள்ளது. இந்நிலையில் துரந்தர் அந்த சாதனையை விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளது.


