News March 16, 2025
எதிரிகளை நடுங்க வைக்கும் இந்திய ஆயுதம்! (1/2)

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், அது மாதிரி எதிரிகளை நடுங்க வைக்க ஒரு புதிய ஆயுதத்தை களமிறக்கி இருக்கிறது இந்திய ராணுவம். அதன் பெயர் VMIMS. அதாவது வாகனத்தில் பொருத்தப்பட்ட காலாட்படையின் மோர்டார் சிஸ்டம். ஆயுத பலத்தை அதிகரிக்க சிக்கிமின் மலைப்பகுதிகளில் இதனை நிலை நிறுத்தியிருக்கிறது இந்திய ராணுவம். இதன் சிறப்புகள் என்ன? பார்க்கலாம்….
Similar News
News March 16, 2025
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: 90 வீரர்கள் பலி?

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்தி பெரிய தாக்குதலை நடத்திய BLA இயக்கத்தினர், பாக்., அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளனர். குவெட்டாவில் இருந்து டஃப்டான் நோக்கி சென்ற 7 ராணுவ வாகனங்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA அறிவித்துள்ளது. ஆனால், 7 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
News March 16, 2025
பிரபல கவிஞர் காலமானார்.. முர்மு, மோடி இரங்கல்

பிரபல ஒடியா கவிஞரும், ஒடிஷா EX CS-மான ரமாகாந்த் ரத் காலமானார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கலில், தனது மறக்க முடியாத படைப்புகளால் ரமாகாந்த் அகில இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்ட இரங்கலில், ரமாகாந்த் மறைவு மிகுந்த வேதனையை அளித்ததாக கூறியுள்ளார். ரமாகாந்த், சாஹித்ய அகாடமி, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
News March 16, 2025
நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: வருண் சக்ரவர்த்தி

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20, ODI போட்டிகளில் கலக்கும் அவருக்கு, டெஸ்ட் அணியிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என குரல்கள் எழுகின்றன. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கு தனது பந்துவீச்சு பொருத்தமாக இருக்காது என வருண் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 20 – 30 ஓவர்களை தன்னால் வீச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.