News March 16, 2024
25 ஆண்டுகளில் 35 கோடி வாக்காளர்கள் அதிகரிப்பு

1999-2024 வரையிலான வாக்காளர்கள், வாக்களித்தவர்களின் விவரம்.
*1999 – 62 கோடி வாக்காளர்கள் – 37.05 கோடி பேர் வாக்களித்தனர்
*2004 – 67 கோடி வாக்காளர்கள் – 38.93 கோடி பேர் வாக்களித்தனர்
*2009 – 72 கோடி வாக்காளர்கள் – 41.70 கோடி பேர் வாக்களித்தனர்
*2014 – 83 கோடி வாக்காளர்கள் – 55.38 கோடி பேர் வாக்களித்தனர் *2019 – 91 கோடி வாக்காளர்கள் – 61.20 கோடி பேர் வாக்களித்தனர் *2024 – 97 கோடி வாக்காளர்கள்
Similar News
News July 6, 2025
கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டு வேணுமா?

கிரெடிட் கார்டு கிடைப்பது இப்போது எளிதாகிவிட்டது. ஆனால், பல வங்கிகளில் ஒரே ஆண்டில் பல்வேறு விதமான கட்டணங்கள் இதற்காக வசூலிக்கப்படுகிறது. இதனால் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். உங்களுக்காகவே கட்டணம் இல்லாத 4 கிரெடிட் கார்டுகள் உள்ளன. IDFC FIRST கிளாசிக், Amazon Pay ICICI, Bank of Baroda Prime, Axis Bank Neo ஆகியவை கட்டணங்கள் வசூலிப்பது இல்லை. Share it..
News July 6, 2025
தம்பதியரே, எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் செக்ஸ் செயல்திறனும் குறையக்கூடும்.
News July 6, 2025
சிவசேனாவை போல் பாமகவை உடைக்க பாஜக முயற்சி: KS

மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது போல் பாமகவை உடைக்க பாஜக முயல்வதாக கே.செல்வப்பெருந்தகை(KS) குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சந்தித்த பிறகு திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க செல்வப்பெருந்தகை முயல்வதாக கருத்து எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் – விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் X தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் பாமகவுக்கு ஆதரவான பேச்சு பேசுபொருளாகியுள்ளது.