News October 20, 2025
கரூர் துயரம்போல் கர்நாடகாவில் ஒரு சம்பவம்

கரூரில் நடந்ததைபோல் கர்நாடகாவில் CM சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,000 பேர் மட்டுமே பிடிக்கக் கூடிய இடத்தில், சுமார் 1 லட்சம் பேர் திரண்டதே நெரிசலுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இதை பண்ணுங்க

சர்க்கரை நோயை மருந்து மாத்திரைகள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். குறைவான கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பெறலாம். அந்த வகையில், நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 20, 2025
தீபாவளியன்று அயராத பணியில் நல் உள்ளங்கள்

தீபாவளி பண்டிகையை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் விடுப்பின்றி பணி செய்கின்றனர். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் இன்று அர்ப்பணிப்போடு கடமையை செய்து வருகின்றனர். நமக்காக பணியாற்றும் இந்த நல் உள்ளங்களுக்காக லைக் போட்டு நன்றி தெரிவிக்கலாமே.
News October 20, 2025
நாளை முதல் அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு அறிவிப்பு

பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாளை(அக்.21) முதல் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. SHARE IT