News September 15, 2025
School Fees-க்கு ₹1 லட்சம் வரை கொடுக்கும் முக்கிய திட்டம்!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை கொடுக்கிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற https://scholarships.gov.in/ – ல் அப்ளை பண்ணுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
ட்ரெண்டிங் AI retro saree போட்டோஸ் உருவாக்க

இன்ஸ்டாவில் AI retro saree புகைப்படங்கள் ட்ரெண்டாகி உள்ளது. பலரும் AI retro saree படங்களை உருவாக்க சிரமப்படுகின்றனர். நீங்களும் சிரமப்படுகிறீர்களா? தரமான படத்தை உருவாக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. கடைசி படம்தான் ரொம்ப முக்கியம். இதை பின்பற்றி தரமான படத்தை உருவாக்கி போஸ்ட் பண்ணுங்க. இது உங்களுக்கு உதவியாக இருந்ததா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 15, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை: TTV தினகரன்

EPS, CM வேட்பாளராக இருக்கும் வரை ADMK அங்கம் வகிக்கும் NDA-வுடன் கூட்டணி இல்லை என TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் AMMK இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி வாகை சூடும் என ஆருடம் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி விஜய் பிரசாரம் செய்வதாக கூறப்படுவது தங்களது கட்சியினருக்கு பெருமை என்றார். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 15, 2025
தாய்மையை தலைநிமிர வைத்த ஜுவாலா குட்டா

தன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை மார்பமுதாய் வழங்கி, நோயெதிர்ப்பு கொண்ட குழந்தையாக மாற்றும் வல்லமை கொண்டவள் பெண். அந்த அமுதம், தன் குழந்தைக்காக மட்டுமல்லாது, அதற்காக காத்திருக்கும் பல குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார் ஜுவாலா குட்டா. கிட்டத்தட்ட 30 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கி உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், விஷ்ணு விஷாலின் மனைவி ஆவார்.