News April 11, 2024

வானில் வெடித்து சிதறப்போகும் நட்சத்திரம்

image

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளை காண மக்கள் எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பர். அந்த வகையில், இறந்த வெண் குறுமீன் மற்றும் ரெட் ஜெயண்ட் உள்ளடக்கிய அமைப்பு நடப்பு ஆண்டு வெடித்து சிதற காத்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனா பொரியாலிஸ் என்ற அமைப்பு செப்டம்பருக்கு முன்னதாக வெடித்து சிதறவுள்ளது. இந்த நிகழ்வை தொலைநோக்கி இன்றி வெறும் கண்ணால் காணலாம்.

Similar News

News November 13, 2025

அஜித்குமார் வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

image

போலீஸ் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வழக்கில், கைதான தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 3 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவ.19-க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News November 13, 2025

தேவநாதனை கைது செய்ய தீவிரம்

image

நிதி நிறுவனம் நடத்தி ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில், அரசியல் தலைவரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால், ஜாமீன் நிபந்தனைப்படி ₹100 கோடி வைப்புத்தொகை செலுத்தாததால், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று நேற்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

News November 13, 2025

வாக்காளர்களை தீர்மானிக்கும் ஆட்சியாளர்கள்: சீமான்

image

தேர்தல் ஆணையத்தின் SIR பணிகளை எதிர்ப்பது போல் திமுக அரசு நாடகமாடுவதாக சீமான் குற்றம்சாட்டினார். உண்மையில் SIR-ஐ எதிர்த்திருந்தால் அவசரமாக சட்டசபையை கூட்டி, இது சீரழிவு என திமுக சொல்லியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அன்று வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தீர்மானித்தார்கள் என்றும், இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தீர்மானிக்கிறார்கள் எனவும் சீமான் சாடினார்.

error: Content is protected !!