News April 15, 2024
விளக்கம் கேட்கலாம், ஆனால் வழக்கு தொடர முடியாது

தேர்தல் விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்தை வெளியிட திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், எங்களிடம் விளக்கம் கேட்கலாம், ஆனால், நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
ஒல்லியானது ஏன்? கீர்த்தி சுரேஷ் Open Talk

இன்றளவும் கீர்த்தி சுரேஷ் chubby-யாக இருந்தால்தான் நல்லா இருக்கும் என பலர் விமர்சித்து வருகின்றனர். இதுபற்றி பேசிய அவர், உடல்நலத்தை விட நடிப்பு முக்கியமில்லை என பதிலடி கொடுத்துள்ளார். முன்பு 10 இட்லி, தோசை சாப்பிட்ட நான் இப்போதும் உணவுக் கட்டுப்பாடின்றி இருக்கிறேன், ஆனால் உடற்பயிற்சி செய்கிறேன் எனவும் விளக்கமளித்துள்ளார். இதனால், 12 மாதங்களில் 10 கிலோ வரை குறைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 23, 2025
செய்தியாளரை ‘போடா’ என்ற சீமான்.. மீண்டும் சர்ச்சை

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி சீமான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். SIR-யை மேற்கு வங்க அரசு போல TN அரசு எதிர்க்கவில்லை என சீமான் குற்றம்சாட்டினார். அப்போது, ECI-ன் அறிவிப்பை அரசு பின்பற்ற வேண்டும் எனக் கூறிய ஒரு செய்தியாளரை, ‘டேய் உனக்கு அறிவு இல்லையா பைத்தியக்காரா’ என ஒருமையில் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்பு TV நிகழ்ச்சியில் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
News November 23, 2025
குளிரில் கைகளில் வெடிப்பா? ஃபிக்ஸ் பண்ண சில டிப்ஸ்!

குளிர்காலம் வந்தாலே கைகள் வறண்டு, வெடிப்பு ஏற்படுகிறதா? தோலின் வெளிப்புற அடுக்கில் ஏற்படும் வறட்சியே இதற்கு காரணம். உங்கள் கைகளை மீண்டும் மென்மையாக மாற்ற இதெல்லாம் அவசியம். *சூடான நீரில் கைகளை கழுவாதீர்கள் *கடுமையான சோப்புகளை பயன்படுத்த வேண்டாம் *Moisturizer தடவுங்கள் *கையுறைகள் அணிவது நல்லது *தண்ணீர் நிறைய குடிக்கவும். *கைகளில் வெடிப்பு அதிகமாக இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.


