News April 10, 2024
விலங்குகளின் சுபாவத்தில் மாற்றம் ஏற்படுத்திய கிரகணம்

கிரகணத்தின்போது விலங்குகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிதானமான விலங்காக கருதப்படும் ஒட்டகச்சிவிங்கிகள், காடுகளில் வேட்டையாடப்படும் போது ஓடுவது போல கிரகணத்தின்போது திடுக்கிட்டு ஓட ஆரம்பித்துள்ளன. அதே போல, எப்போதும் சாதுவாக அமர்ந்திருக்கும் கலாபகோஸ் ராட்சத ஆமைகள் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 12, 2025
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ₹87.66-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்; சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
News August 12, 2025
OPSஐ விமர்சிக்க கூடாது: பாஜக உத்தரவு

OPS-ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA-வில் தொடர்ச்சியாக OPS ஓரங்கட்டப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து அவரை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் PM மோடியுடன், அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பக்கம் மீண்டும் செல்வாரா OPS ?
News August 12, 2025
‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் திருடனுக்கும், மறதி நோயாளிக்கும் இடையேயான பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஷங்கர், வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபகத் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.