News April 25, 2025
பஹல்காமில் ஒரு அயோத்தி சசிகுமார்

தனது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது, தன்னையும் தனது குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் இருவர் காப்பாற்றினர் என கேரளாவைச் சேர்ந்த ஆரத்தி சரத் கூறியுள்ளார். அயோத்தி படத்தில், இந்து மத குடும்பத்திற்கு இஸ்லாமியரான சசிகுமார் உதவுவது போன்று பஹல்காமிலும் நிகழ்ந்துள்ளது. மேலும், தந்தையின் சடலம் கிடைக்கும் வரையிலும் அவர்கள் ஆரத்தி உடனே இருந்துள்ளனர்.
Similar News
News April 26, 2025
புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News April 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 26, 2025
இந்தியாவுடன் நிற்கிறோம்: இலங்கை அதிபர்

இந்த கடினமான காலத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.