News October 20, 2025

ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சி திருநாள்: கமல்

image

தீபாவளியை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகரும், MP-யுமான கமல்ஹாசன். அவரது எக்ஸ் பதிவில், ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக; தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Similar News

News April 4, 2026

முதல் வெற்றியை பெறுமா குஜராத் டைட்டன்ஸ்?

image

IPL-ல், இன்று நடக்கும் 2-வது போட்டியில் GT, RR அணிகள் அகமதாபாத்தில் மோதுகின்றன. அதிரடி பேட்ஸ்மேன்களையும், அனுபவமிக்க பவுலர்களையும் கொண்டிருப்பதால் RR அணி வலுவாக காணப்படுகிறது. மறுபுறம், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால் GT தடுமாறுகிறது. எனினும், உள்ளூரில் ஆடுவது GT-க்கு சாதகமாகும். அகமதாபாத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

News April 4, 2026

ELECTION: டஃப் தொகுதி.. விட்டுக்கொடுத்த AC சண்முகம்!

image

புதிய நீதிக் கட்சிக்கு <<19557080>>பாஜக சீட் ஒதுக்காத<<>> காரணம் குறித்து AC சண்முகம் விளக்கமளித்துள்ளார்.
கடினமான சட்டப்பேரவை தொகுதியை பாஜக கொடுத்ததால் அதை வேண்டாம் என திருப்பி கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். எனினும், அத்தொகுதியில் தான் பரிந்துரைத்த வேட்பாளரையே பாஜக களமிறக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News April 4, 2026

10-15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: கிருஷ்ணசாமி

image

கூட்டணியில் இணைந்திருந்தால் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் தனித்து போட்டியிடுவதால் 10-15 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு உள்ளதாக கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், ஏப்.6 அன்று மதியம் 12-3 மணிக்குள் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!