News August 18, 2025

11 விநாயகர் சபை இருக்கும் அதிசய கோயில்!

image

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வாசீஸ்வரர் திருத்தலத்தில் ‘11 விநாயகர் சபை’ உள்ளது. புராணங்களின்படி, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டதால், வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்தது. விநாயகர் சபை அமைத்தும் விசாரணை மேற்கொண்டாராம். அதனடிப்படையில்தான், இங்கு 11 விநாயகர் சபை உள்ளது. இக்கோயிலில் வந்து வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

Similar News

News March 24, 2026

காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

image

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வெந்தய தேநீர் உதவும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கெட்டக் கொழுப்பை கரைக்கவும், மாதவிடாய் வலியை தணிக்கவும் கூட இது உதவுமாம். ➤வெந்தயத்தை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேருங்கள். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. தினமும் காலையில் அருந்துங்கள். SHARE.

News March 24, 2026

எந்தெந்த தொகுதியில் போட்டி.. நள்ளிரவிலும் BJP ஆலோசனை

image

சென்னை கமலாலயத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை எல்.முருகன், நயினார், தமிழிசை உள்ளிட்டோருடன் பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை, வானதியும், தென் மாவட்டத்தில் நயினார், தமிழிசை உள்ளிட்டோர் போட்டியிடுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தொடர் சரிவில் உள்ள தங்கம், இன்று 1 அவுன்ஸ் $130.98(இந்திய மதிப்பில் 12,225) குறைந்துள்ளது. இதனால், 2.74% வீழ்ச்சியடைந்து $4,367-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சரிவால், இந்திய சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னையில் 1 கிராம் ₹13,340-க்கும், 1 சவரன் ₹1,06,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!