News October 10, 2025

திமுக மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சி?

image

வாணியம்பாடியை கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கிடம் இருந்து பறிக்க திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூரின் வாணியம்பாடியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அதனாலேயே முஸ்லிம் லீக் கட்சிக்கு அது ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், தொடர்ந்து 3 தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்துள்ளது. எனவே, இம்முறை திமுகவே நேரடியாக களமிறங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 10, 2025

இந்த ஆப்’லாம் இருக்கு: இனி Queue எதற்கு!

image

உலகமே நவீனமயமாகி விட்ட நிலையில், அரசும் அதற்கேற்ப பல மக்கள் சேவைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்க, தொலைந்து போன டிரைவர் லைசன்ஸ் போன்றவற்றை பெற அரசு அலுவலகத்திற்கு நடையோ நடை’னு நடக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கள், உங்களின் தினசரி வேலைகளுக்கு அதிக அளவில் உதவும். SHARE IT.

News October 10, 2025

நடிகை த்ரிஷாவுக்கு திருமணம்.. வெளியானது அப்டேட்

image

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கு கிட்டத்தட்ட தற்போது பதில் கிடைத்துவிட்டது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷா விரைவில் கரம் பிடிக்கவுள்ளதாகவும், இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. செய்தி அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

News October 10, 2025

கிராம சபை கூட்டங்களில் CM பங்கேற்பு

image

தமிழ்நாட்டில் உள்ள 12,480 கிராமங்களில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் காணொலி வாயிலாக CM ஸ்டாலின் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் சாதி பெயர் நீக்குவது உள்ளிட்ட 16 விவகாரங்கள் குறித்து நாளைய கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!