News August 21, 2024
BCCI-க்கு கூடுதலாக ₹5,120 கோடி லாபம்

2023 IPL போட்டிகள் மூலம் BCCI-க்கு கூடுதலாக ₹5,120 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. BCCI வெளியிட்ட ஆண்டு நிதி அறிக்கையில், 2023 IPL போட்டிகள் மூலம் மொத்தம் ₹11,769 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த 2022 வருமானத்தை காட்டிலும் 116% அதிகமாகும். அதேவேளையில், கடந்த 2022ஐ விட 66% அதிகமாக ₹6,648 கோடி செலவு செய்துள்ளது. ஊடகங்களின் ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஷிப் மூலமே அதிக லாபம் ஈட்டியுள்ளது.
Similar News
News March 24, 2026
மூத்த தலைவர் தத்தா மேகே காலமானார்

காங்கிரஸ், பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தத்தா மேகே(89) காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பில் நாக்பூரில் போட்டியிட்டு 4 முறை லோக் சபா MP ஆகியுள்ளார். மேலும், 1999-ல் தேசியவாத காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தபோது, இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தத்தாவின் மறைவுக்கு நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

சாத்தான்குளம்.. EPS மன்னிப்பு கேட்க வேண்டும்: ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து 2020-ல் நடந்த பெரிய வன்முறை சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் என ரகுபதி தெரிவித்துள்ளார். போலீஸாரால் கொல்லப்பட்டவர்களை உடல்நலக்குறைவு என அன்றைய CM பொய் சொல்லி போலீசாரை காப்பாற்றினார்; <<19457182>>இன்றைய தீர்ப்பை அடுத்து<<>> பொய் சொன்ன EPS-ம் ஒருவகையில் குற்றவாளிதான். எனவே அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.