News October 5, 2025
நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்!

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
Similar News
News October 5, 2025
தூய்மை பணியாளர்கள் உயிரை துச்சமாக கருதும் DMK: நயினார்

தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமென திமுக அரசு தூக்கியெறிவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். கார் ரேஸ்ஸூக்கும், விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசு, ஏழைத் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில ஆயிரங்களை செலவு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 5, 2025
Recipe: செட்டிநாட்டு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாம் வாங்க!

*வாணலியில் பச்சரிசி, பாசிப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை நன்றாக வறுத்து, மாவு பதத்தில் அரைத்து தூளாக்கி கொள்ளவும் *கடாயில் 2 தேக்கரண்டி நெய், வடிகட்டிய வெல்லப் பாகு, பால் ஊற்றி கொதிக்க விடவும் *பின் அடுப்பை சிம்மில் வைத்து, மாவு கலவையை சேர்த்து கிளறவும் *வெந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு கும்மாயம் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.
News October 5, 2025
சற்றுமுன்: கார் விபத்தில் சிக்கினார் கல்யாணசுந்தரம்

அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிறு காயங்களோடு கல்யாணசுந்தரம் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.