News August 14, 2024
தென் மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு

திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
ஜூன் மாதம் முதல் தற்போது வரை பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சராசரியாக 238 மி.மீ மழையும், தென்காசி மாவட்டத்தில் 200 மி.மீ மழையும்,
மதுரை மாவட்டத்தில் சராசரியாக 200 மி.மீ மழையும், விருதுநகரில் 188 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 24, 2025
நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்தில் 3 கொலைகள் தடுப்பு

நெல்லை மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் எல்லைகளில், சதித்திட்டத்துடன் திட்டமிடப்பட்ட இரண்டு கொலைகளை ஜூன் மாதம் காவல்துறை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்தது. இதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 19 போலீசாருக்கு விருது வழங்கினார். நேற்று களக்காடு அருகே 5 பேரை கைது செய்ததால் மற்றொரு கொலை தடுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் நெல்லையில் 3 கொலை முயற்சிகள் தடுக்கப்பட்டன.
News August 24, 2025
நெல்லையில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.
News August 24, 2025
நெல்லை: நம்ம ஊரு கலெக்டரை அழைக்கலாம்!

நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 97865 66111 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462-2501222. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.