News April 12, 2025
NDA கூட்டணியில் அமமுக நீடிக்கிறது: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அமமுக நீடிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021 தேர்தலில் அமித்ஷாவின் பேச்சை கேட்டு நடந்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்திருக்காது எனக் கூறிய அவர், ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டதாக பேசுவது தவறு என்றார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குவது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 540
▶குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
▶பொருள்: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
News December 5, 2025
பகவத் கீதையை புடினுக்கு பரிசளித்த PM மோடி

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு PM மோடி பகவத் கீதையை பரிசளித்துள்ளார். இதுபற்றி X-ல் PM மோடி, பகவத் கீதையின் போதனைகள் உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிபர் புடினுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
News December 5, 2025
பிரித்து ஆளும் கொள்கை உடைய திமுக: தமிழிசை

தமிழ் வேறு இந்து மதம் வேறு என்று கூறிய சட்ட அமைச்சர் ரகுபதிக்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ் என்றும், தமிழையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் பிரித்தாலும் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று X-ல் தமிழிசை பதிவிட்டுள்ளார்.


