News March 27, 2025
அம்மாடியோவ்.. ₹34.31 லட்சம் கோடி சொத்து!

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 4ஆவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். $400 பில்லியன் (₹34.31 லட்சம் கோடி) சொத்து மதிப்பை தாண்டிய முதல் ஆளாகவும் மஸ்க் உருவெடுத்துள்ளார். டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரது சொத்து மதிப்பு 82% உயர்ந்துள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2ஆம் இடத்திலும் ($266 பில்லியன்), மெட்டா நிறுவனர் மார்க் 3ஆம் இடத்திலும் ($242 பில்லியன்) உள்ளனர்.
Similar News
News April 1, 2025
HAPPY NEWS: மரணம் முடிவல்ல, மீண்டும் உயிர் பெறலாம்

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி சாம் பார்னியா. ஒருவர் மரணமடைந்த பின்னும் பல மணி நேரத்துக்கு, ஏன் சில நாள்களுக்கு கூட மூளை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதேபோல உடல் செல்களும் கூட சில நாள்கள் வரை அழிவதில்லை. அதனால், ECMO இயந்திரங்கள், சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் மூளையை மீண்டும் உயிர் பெறச் செய்யலாம் என்கிறார் பார்னியா. இது வரமா? சாபமா?
News April 1, 2025
நட்சத்திர அந்தஸ்தை நழுவ விட்ட முன்னணி வீரர்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக இருக்கும் டேனில் மெத்வதேவ், 2023-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஏடிபி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாமல் சறுக்கியுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அவர், கடந்த ஆண்டு நடந்த எந்த டென்னிஸ் தொடரிலும் பட்டம் வெல்லவில்லை. இதனால், ஏடிபி தரவரிசையில் அவர் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடம் பிடித்துள்ளார்.
News April 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிப்பதில் குழப்பம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுடையவர்களுக்கு 3 மாதத்திற்குள் உதவித் தொகை அளிக்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு யார்-யார் விண்ணப்பிப்பது? ரேஷன் கடையில் விண்ணப்பிப்பதா? இ-சேவை மையத்திலா? என அறிவிப்பு இல்லை. இதனால் பெண்கள் குழப்பத்தில் உள்ளனர்.